ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் 16 நாள் உண்டியல் வருமானம் ரூ.1 கோடியே 11 லட்சம்

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 16 நாட்களில் உண்டியலில் 1 கோடியே 11 லட்சம் காணிக்கை செலுத்தியுள்ளனர்.

Update: 2022-07-30 03:11 GMT

ஸ்ரீகாளஹஸ்தி:

திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களில் பலர் கோவிலில் நடக்கும் ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரணப் பூஜையில் பங்கேற்று வழிபட்டு வருகின்றனர். சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் கோவில் வளாகத்தில் உள்ள உண்டியல்களில் காணிக்கைகளை செலுத்தி வருகின்றனர்.

கடந்த 16 நாட்களாக பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் நேற்று காலையில் இருந்து மாலை வரை கோவில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு, அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு ஆகியோர் முன்னிலையில் ஊழியர்கள் எண்ணினர்.

அதில் பணமாக ரூ.1 கோடியே 11 லட்சத்து 65 ஆயிரத்து 495, தங்கம் 28 கிராம், வெள்ளி 270 கிலோ மற்றும் அமெரிக்கா, மலேசியா, கனடா, குவைத் போன்ற வெளி நாட்டுப் பணம் மொத்தம் 64 கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்