15 பெருமாள்கள் நவநீத சேவை

தஞ்சையில் 15 பெருமாள்கள் நவநீத சேவை விழா நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டுதரிசனம் செய்தனர்.;

Update:2023-06-11 02:29 IST

தஞ்சாவூர்;

தஞ்சையில் 15 பெருமாள்கள் நவநீத சேவை விழா நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

நவநீத சேவை

தஞ்சையில் இந்து சமய அறநிலையத்துறை, அரண்மனை தேவஸ்தானம், ராமானுஜ தர்சன சபை சார்பில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் கருடசேவை புறப்பாடு மற்றும் அதனைத் தொடர்ந்து நவநீத சேவை (வெண்ணெய்தாழி உற்சவம்) நடைபெற்று வருகிறது. அதேபோல் இந்த ஆண்டு 24 பெருமாள்கள் கருடசேவை புறப்பாடு நேற்றுமுன்தினம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து 15 பெருமாள்கள் நவநீத சேவை அதி விமரிசையாக நேற்று நடைபெற்றது.இதில் வெண்ணாற்றங்கரை நீலமேக பெருமாள், நரசிம்ம பெருமாள், மணிகுன்ற பெருமாள், கல்யாண வெங்கடேச பெருமாள், மேலவீதி நவநீத கிருஷ்ணன், எல்லையம்மன் கோவில் தெரு ஜனார்த்தன பெருமாள், கரந்தை யாதவ கண்ணன், கீழவீதி வரதராஜ பெருமாள், தெற்கு வீதி கலியுக வெங்கடேச பெருமாள், பள்ளியக்ரஹாரம் கோதண்டராமசாமி பெருமாள், மகர்நோம்புசாவடி நவநீத கிருஷ்ணன், பிரசன்ன வெங்கடேச பெருமாள், மேல அலங்கம் ரெங்கநாத பெருமாள், படித்துறை வெங்கடேச பெருமாள், கோட்டை பிரசன்ன வெங்கடேச பெருமாள் ஆகிய கோவில்களிலிருந்து பெருமாள்கள் வெண்ணெய்த்தாழி அலங்காரத்தில் அந்தந்த கோவில்களில் இருந்து அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டிகளில் புறப்பட்டு தஞ்சை கொடிமரத்து மூலைக்கு வந்தடைந்தனர்.

பக்தர்கள் தரிசனம்

பின்னர் கீழவீதி, தெற்குவீதி, மேலவீதி, வடக்கு வீதியில் வலம் செல்லும் வைபவம் நடைபெற்றது. நவநீத சேவை உற்சவத்தில் பஜனை பாடல்களை பாடி பக்தர்கள்சென்றனர். இந்த நவநீத சேவையை ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்