மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் பங்குனி பெருவிழா

மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் இ்ன்று தொடங்குகிறது;

Update:2023-03-11 00:22 IST
மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் பங்குனி பெருவிழா

மன்னார்குடி,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பிரசித்தி பெற்ற ராஜகோபாலசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா சிறப்பாக நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் இன்று(சனிக்கிழமை) தொடங்குகிறது.விழாவில் 20 -ந் தேதி(திங்கட்கிழமை) தங்க சூரிய பிரபை, 22-ந் தேதி தங்க கருடவாகனத்தில் இரட்டை குடை சேவையும், நடக்கிறது.26-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) வெண்ணெய்தாழி உற்சவம் நடக்கிறது. அன்று காலை நவநீத சேபையில் ராஜகோபாலன் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறாா். இரவில் தங்க குதிரை வாகனத்தில் ராஜ அலங்காரத்தில் சாமி காட்சி தருகிறார். 27-ந் தேதி(திங்கட்கிழமை) தேரோட்டம் நடக்கிறது. 

Tags:    

மேலும் செய்திகள்