ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழா: 30-ம் தேதி கொடியேற்றம்.. ஆகஸ்ட் 7-ல் தேரோட்டம்

ஆடிப்பூர திருவிழாவின் ஒரு பகுதியாக, ஆகஸ்ட் 3-ம் தேதி ஆடிப்பூர பந்தலில் பெரியாழ்வார் மங்களாசாசனம் நடைபெறுகிறது.

Update: 2024-07-26 11:36 GMT

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் உள்ளது. 108 வைணவ திவ்ய தேசங்களில் முக்கிய தலங்களில் ஒன்றாக இந்த கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் ஆண்டாள் பிறந்த நட்சத்திரமான ஆடிப்பூரத்தை முன்னிட்டு வெகுவிமரிசையாக திருவிழா நடைபெறும். விழாவின் சிகர நிகழ்ச்சியாக ஆடிப்பூரம் அன்று தேரோட்டம் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.

அவ்வகையில், இந்த ஆண்டுக்கான ஆடிப்பூர திருவிழா வரும் 30-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று இரவு 10 மணிக்கு பதினாறு வண்டிச் சப்பரவிழா நடக்கிறது.

ஆகஸ்ட் 3-ம் தேதி காலை 10 மணிக்கு ஆடிப்பூர பந்தலில் பெரியாழ்வார் மங்களாசாசனமும், இரவு 10 மணிக்கு ஐந்து கருட சேவையும், 5-ம் தேதி இரவு 7 மணிக்கு கிருஷ்ணன் கோவிலில் ஆண்டாள், ரெங்கமன்னார் சயன திருக்கோலமும் நடைபெறுகிறது.

முக்கிய நிகழ்வாக, ஆகஸ்ட் 7-ம் தேதி ஆடிப்பூரம் அன்று காலை 9.05 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. 10-ம் தேதி மாலை 6 மணிக்கு புஷ்ப யாகத்துடன் ஆடிப்பூர திருவிழா நிறைவுபெறுகிறது. 

மேலும் ஆன்மிக செய்திகளுக்கு.. https://www.dailythanthi.com/Others/Devotional

Tags:    

மேலும் செய்திகள்