சாஸ்திரம் கூறும் சில தகவல்கள்

இந்து மதத்திற்கென தர்ம சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள பயனுள்ள அறிவுரைகளைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

Update: 2023-01-20 08:44 GMT

* குரு, கர்ப்பிணி, நோயாளி, சன்னியாசி ஆகியோருக்கு ஆபத்து காலத்தில் கண்டிப்பாக உதவ வேண்டும். அது மிகவும் புண்ணியம்.

* தாய்க்கு நிகரான அண்ணியை தினமும் வணங்க வேண்டும்.

* சகோதரன் அல்லது சகோதரி தாழ்ந்த நிலையில் இருந்தால், அவர்களுக்கு உதவிசெய்ய வேண்டும்.

* இடது கையால் இருக்கையை தூக்கிப் போட்டால், ஆரோக்கியம் பாதிக்கும்.

* இடது கையால் தலையில் எண்ணெய் தேய்த்துக் கொண்டால், பிள்ளைகளுக்கு பாதிப்பு வரும்.

* இடது கையால் சாப்பாடு போட்டுக் கொண்டால் செல்வம் அழியும்.

* பசு, தேர், நெய்குடம், அரச மரம், வில்வம், அரசுடன் சேர்ந்த வேம்பு போன்றவை எதிரில் குறுக்கிட்டால், அவற்றை வலதுபுறமாக சுற்றிச் செல்ல வேண்டும்.

* ஒரு கையை தரையில் ஊன்றி சாப்பிடக்கூடாது, மழை பெய்யும் போது ஓடக்கூடாது, நெருப்பை வாயால் ஊதக்கூடாது.

* குடும்பஸ்தன் ஒரு ஆடை மட்டும் அணிந்து உணவு சாப்பிடக்கூடாது.

* கன்றுக்குட்டியைக் கட்டி வைத்திருக்கும் கயிற்றை தாண்டக்கூடாது.

* திருமணம் ஆகாமலே ஒரு பெண்ணுடன் வாழ்பவரை, சுப காரியங்களில் முன்னிறுத்தக்கூடாது.

* சாப்பிடும் போது, முதலில் இனிப்பு, உவர்ப்பு, புளிப்பு, கசப்பு பதார்த்தங்களை வரிசையாக சாப்பிட்டு, பின் நீர் அருந்த வேண்டும்.

* சாப்பிடும் வேளை தவிர, மற்ற நேரங்களில் இடது கையால் தண்ணீரை அருந்தக்கூடாது.

* இருட்டில் சாப்பிடக்கூடாது. சாப்பிடும்போது விளக்கு அணைந்து விட்டால், சூரியனை தியானம் செய்து, மீண்டும் விளக்கேற்றி விட்டு சாப்பிட வேண்டும்.

* சாப்பிட்டவுடன் குடும்பஸ்தன் வெற்றிலை போட வேண்டும். வெற்றிலை நுனியில் பாவமும், முனையில் நோயும், நரம்பில் புத்திக் குறைவும் உள்ளதால், அவற்றையெல்லாம் கிள்ளி எறிந்து விட வேண்டும்.

* மனைவி, கணவனுக்கு வெற்றிலை மடித்துக் கொடுக்கலாமே தவிர, கணவன், மனைவிக்கும், மகன், தாய்க்கும், பெண், தந்தைக்கும் மடித்துத் தரக் கூடாது.

* குரு, ஜோதிடர், வைத்தியர், சகோதரி ஆகியோரை பார்க்கச் செல்லும் போதும், ஆலயத்திற்குச் செல்லும் போதும் வெறுங்கையுடன் செல்லக்கூடாது.

* தீ உள்ள பொருட்களை தரை மேல் போட்டு காலால் தேய்க்கக்கூடாது. பூமாதேவியின் சாபம் ஏற்பட்டு, பூமி, மனை கிடைக்காமல் போய் விடும்.

* பெற்ற தாய் சாபம், செய்நன்றி கொல்லுதல், பிறன் மனைவி கூடுதல் ஆகிய மூன்றும், பரிகாரம் இன்றி அனுபவித்தே தீர வேண்டிய பாவங்கள்.

* உடல் குறைபாடு உள்ளவர்கள் (மாற்றுத்திறனாளிகள்), ஆறு விரல் உள்ளவர்கள், கல்வியில்லாதவர்கள், முதியோர், வறுமையில் தவிப்பவர்கள் ஆகியோரின் குறையை குத்திக்காட்டி பேசக்கூடாது.

* பசுமாட்டை காலால் உதைப்பது, அடிப்பது, தீனி போடாமல் இருப்பது பாவம்.

* பசு மாட்டை, கோமாதாவாக எண்ணி, புல், தவிடு, தண்ணீர், புண்ணாக்கு, அகத்திக்கீரை கொடுப்பது புண்ணியம்.

* வீட்டுக்குள் நுழையும் போது, தலைவாசல் வழியாகத் தான் நுழைய வேண்டும்.

* நம்மை ஒருவர் கேட்காதவரையில், நாம் அவருக்கு ஆலோசனை கூறக் கூடாது.

Tags:    

மேலும் செய்திகள்