ராமாயண கதாபாத்திரங்கள்
ஒரு சொல், ஒரு வில், ஒரு இல் என்று வாழ்ந்த ராமபிரானின் காவியம் இடம்பெற்ற ராமாயணம், சிறப்பு வாய்ந்த இதிகாசங்களில் ஒன்று. இந்த ராமாயண காவியத்தில் இடம்பெற்ற கதாபாத்திரங்களின் எண்ணிக்கை ஏராளம். அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.
* வசிஷ்டர்:- தசரதனின் குலகுரு, அருந்ததியின் கணவர்.
* ராமன்:- ராமாயண கதாநாயகன், திருமால் எடுத்த அவதாரங்களில் மனிதனாக வாழ்ந்தவர்.
* சீதா:- ராமனின் மனைவி. ஜானகி, வைதேகி, ஜனகநந்தினி, ஜனககுமாரி, மைதிலி ஆகிய பெயர்களும் இவருக்கு உண்டு.
* ராவணன்:- விச்ரவா என்பவரின் மகன், குபேரனின் தம்பி, புலஸ்திய முனிவரின் பேரன்.
* லட்சுமணன்:- ராமபிரானின் தம்பி. சுமித்திரையின் மூத்த மகன். ராமனுக்கு பணிசெய்வதற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்தவன்.
* தசரதர்:- ராமனின் தந்தை.
* அகல்யை:- ராமரின் காலடி பட்டு சாபம் நீங்கப்பெற்றவள்.
* அங்கதன்:- வாலி - தாரையின் மகன். கிஷ்கிந்தையின் இளவரசன்.
* இந்திரஜித்:- ராவணனின் மகன். மேகநாதன் என்ற பெயரும் கொண்டவன். லட்சுமணனால் அழிந்தவன்.
* கரன் மற்றும் தூஷணன்:-
ராவணனின் தம்பிகள், ராமனின் கையால் அழிந்தவர்கள். ஜனஸ்தானம் என்ற இடத்திற்கு அதிபதிகள்.
* கபந்தன்:- தலையும் காலும் இல்லாத அரக்கன். ராமனால் வதைக்கப்பட்டவன். கந்தர்வ வடிவம் பெற்று ராம - லட்சுமணர்கள் கிஷ்கிந்தை செல்ல வழி காட்டியவன்.
* குகன்:- வேடர் தலைவன், படகோட்டி, ராமரால் தன்னுடைய சகோதரனாக ஏற்றுக் கொள்ளப்பட்டவன்.
* கும்பகர்ணன்:- ராவணனின் தம்பி, ஆறு மாதங்கள் சாப்பிட்டும், மீதமுள்ள ஆறு மாதங்கள் பெரும் தூக்கம் தூங்கியே பொழுதைக் கழிப்பவன்.
* கவுசல்யா, கைகேயி, சுமித்திரை:- தசரதரின் பட்டத்
தரசிகள்.
* சுநைனா:- ஜனகரின் மனைவி, சீதையின் தாய்.
* கவுதமர்:- அகல்யையின் கணவர், முனிவர்
* சதானந்தர்:- அகல்யை, கவுதமரின் மகன். சீதையின் திருமணத்திற்கு வந்த புரோகிதர்.
* சம்பராசுரன்:- இவனுக்கும், தேவர்களுக்கும் நடந்த போரில் தசரதர் தேவர்களுக்கு உதவினார்.
* சபரி:- மதங்க முனிவரின் மாணவி, ராமனை தரிசித்தவள்.
* சதபலி:- வடக்கு திசையில் சீதையை தேடச்சென்றவன்.
* சம்பாதி:- கழுகரசன் ஜடாயுவின் அண்ணன், சீதையைக் காண அங்கதனின் படைக்கு உதவியவன்.
* சுமந்திரர்:- தசரதரின் மந்திரி, தேரோட்டி.
* சுக்ரீவன்:- கிஷ்கிந்தையின் மன்னன், வாலியின் தம்பி, சூரியன் அருளால் பிறந்தவன்.
* சுஷேணன்:- வாலியின் மாமனார், வானர மருத்துவன், மேற்கு திசையில் சீதையை தேடச் சென்றவன்.
* சூர்ப்பணகை:- ராவணனின் தங்கை.
* தாடகை:- காட்டில் வசித்த அரக்கி, ராமனால் அழிந்தவள்.
* தாரை:- வாலியின் மனைவி, அங்கதனின் தாய். அறிவில் சிறந்த வானர ராணி.
* திரிசடை:- அசோகவனத்தில் இருந்த அரக்கிகளுள் நல்லவள், சீதைக்கு நம்பிக்கை ஊட்டியவள்.
* நளன்:- பொறியியல் அறிந்த வானரவீரன், விஸ்வகர்மாவின் மகன், கடலின் மீது இலங்கைக்கு பாலம் கட்டியவன்.
* நீலன்:- வானர வீரன் நளனின் நண்பன், வானர சேனாதிபதி, அக்னி தேவனின் அருளால் பிறந்தவன்.
* பரதன்:- கைகேயியின் மகன், ராமனின் தம்பி.
* மந்தரை:- கைகேயியுடன் கேகய நாட்டிலிருந்து அயோத்திக்கு வந்த வேலைக்காரி.
* மண்டோதரி:- தேவலோக சிற்பியான மயனின் மகள், ராவணனின் பட்டத்தரசி, இந்திரஜித்தின் தாய்.
* மாரீசன், சுபாகு:- தாடகையின் மகன்கள். ராமனால் வதம் செய்யப்பட்டவர்கள், மாரீசன் மாய மானாக வந்தவன்.
* ருமை:- சுக்ரீவனின் மனைவி, வாலியால் கவரப்பட்டவள்.
* லங்காதேவி:- இலங்கையின் காவல் தெய்வம்.
* சமுத்திரராஜன்:- கடலரசன், தன்மீது அணை கட்ட ராமனை அனுமதித்தவன்.
* வால்மீகி:- ராமாயணத்தை எழுதியவர்.
* வாலி:- இந்திரனின் அருளால் பிறந்த வானர வேந்தன்.
* விஸ்வாமித்ரர்:- ராமனுக்கு அஸ்திரவித்தை போதித்தவர்.
* விபீஷணன்:- ராவணனின் தம்பி, ராமனிடம் அடைக்கலம் அடைந்தவன்.
* ஜடாயு:- கழுகரசன் சம்பாதியின் தம்பி, தசரதனின் தோழன், சீதைக்காக ராவணனுடன் போராடி உயிர்நீத்தவன்.
* ஜனகர்:- சீதை, ஊர்மிளாவின் தந்தை
* ஜாம்பவான்:- கரடி வேந்தர், பிரம்மா அருள்பெற்று பிறந்தவர்.
* அனுமான்:- அஞ்சனை - கேசரி ஆகியோருக்கு வாயுபகவானின் அருளால் பிறந்தவர். ராமபிரானின் முதன்மையான பக்தர்.