திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாதம் நடக்கும் விழாக்கள் விவரம் வெளியீடு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

Update: 2024-01-28 11:26 GMT

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக விடுமுறை நாட்களில் திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும்.

இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (பிப்ரவரி) நடைபெறும் சிறப்பு விழாக்கள் குறித்த விவரங்களை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

பிப்ரவரி 9-ந்தேதி புரந்தரதாசர் ஆராதனோற்சவம், 10-ந்தேதி திருக்கச்சிநம்பி உற்சவம் தொடக்கம், 14-ந்தேதி வசந்த பஞ்சமி, 16-ந்தேதி மினி பிரம்மோற்சவம் எனப்படும் ரத சப்தமி விழா, 19-ந்தேதி திருக்கச்சிநம்பி சாத்துமுறை, 20-ந்தேதி பீஷ்ம ஏகாதசி, 21-ந்தேதி குலசேகர ஆழ்வார் திருநட்சத்திரம், 24-ந்தேதி குமாரதாரா தீர்த்த முக்கோட்டி உற்சவம், மக பவுர்ணமி கருடசேவை. மேற்கண்ட விழாக்கள் நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்