கொடுமுடி அய்யப்பன் கோவிலில் படி பூஜை
கொடுமுடி அய்யப்பன் கோவிலில் படி பூஜை நடந்தது.;
கொடுமுடி
கொடுமுடியில் மிகவும் பழமையான அய்யப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் படி பூஜை கோபாலகிருஷ்ணன் குருசாமி தலைமையில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அய்யப்பனை தரிசனம் செய்தனர். இதையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக அய்யப்ப பக்தர்களின் பஜனை நடந்தது.