முப்பந்தல் இசக்கியம்மன் கோவிலில் கொடைவிழா: இன்று தொடங்குகிறது
ஆரல்வாய்மொழி அருகே உள்ள முப்பந்தல் இசக்கியம்மன் கோவிலில் ஆடி கொடைவிழா இன்று தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது.;
ஆரல்வாய்மொழி,
ஆரல்வாய்மொழி அருகே உள்ள முப்பந்தல் (கிழக்கு) இசக்கியம்மன் கோவிலில் ஆடி கொடைவிழா இன்று (திங்கட்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது.
இன்று காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், 7 மணிக்கு சிறப்பு பூஜை, மதியம் 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, மதியம் 3 மணிக்கு மாகாப்பு அலங்காரம், மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 7 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை போன்றவை நடக்கிறது.
நாளை அதிகாலை 5 மணிக்கு சிறப்பு ஹோமம் மற்றும் பூஜைகள், காலை 7 மணிக்கு அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம், சிறப்பு அபிஷேகம், மதியம் 1 மணிக்கு உச்சிகால பூஜை, 1.30 மணிக்கு அன்னதானம், இரவு 7.30 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை, 8 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சி, 11 மணிக்கு பூப்படைப்பு, நள்ளிரவு 12 மணிக்கு ஊட்டு படைப்பு, 1 மணிக்கு பூக்குழி இறங்குதல் ஆகியவை நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் தங்கம், செயல் அலுவலர் பொன்னி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.