வித்தியாசமான நந்தி
வைத்தியநாதர் சிவாலயத்தில் நந்தியின் பின்புறம் வாலைப் பிடித்து ஒருவர் தொங்கிக் கொண்டிருப்பது போன்ற தோற்றம் வடிக்கப்பட்டிருக்கிறது.
இமாச்சல பிரதேச மாநிலம் காங்ரா மாவட்டத்தில் உள்ளது, பைஜ்நாத் என்ற இடம். இங்கு வைத்தியநாதர் என்ற பெயரில் சிவாலயம் ஒன்று உள்ளது. இந்த ஆலயத்தில் இருக்கும் நந்தியை 'ஆன்ம நந்தி' என்கிறார்கள். இந்த நந்தியின் பின்புறம் வாலைப் பிடித்து ஒருவர் தொங்கிக் கொண்டிருப்பது போன்ற தோற்றம் வடிக்கப்பட்டிருக்கிறது. ஒரு மனிதன் மரணம் அடைந்த பின்னர், அவனுக்காக செய்யப்படும் கிரியைகளின் பலனாக, அந்த மனிதனின் ஆன்மா, சிவனருள் மூலமாக எமதர்மனிடம் இருந்து மீட்கப்பட்டு, பித்ரு லோகம் எனப்படும் மூதாதையர்களின் லோகத்திற்கு நந்தியால் கொண்டு செல்லப்படுவதாக, வேதத்தில் உள்ள அந்தியேஷ்டி என்ற பகுதியில் சொல்லப்பட்டுள்ளது. வேதம் சொல்லும் அந்த தத்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில்தான், இந்த சிலை வடிக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள்.