கல்லில் கலைவண்ணம்

குருசேத்திரப் போரில், அர்ச்சுனன் தொடுத்த அம்புகளால் உடல் முழுவதும் துளைக்கப்பட்டு, அந்த அம்புகளே படுக்கையாக மாற யுத்த களத்தில் பாண்டவர்களுக்கு அவர் உபதேசித்ததே ‘விஷ்ணு சகஸ்ரநாமம்’.;

Update:2023-02-24 20:45 IST

மகாபாரதத்தின் ஆணி வேராக இருப்பவர், பீஷ்மர். இவரைச் சுற்றித்தான் மகாபாரதக் கதை பின்னப்பட்டிருக்கும். தந்தையின் ஆசைக்காக ராஜ்ஜியத்தை இழந்ததோடு, திருமண பந்தத்தையே துறந்தவர் பீஷ்மர். அதனால் தந்தையின் மூலம் 'நினைக்கும்போது மரணிக்கும்' வரத்தை பெற்றிருந்தார். ஒரு கட்டத்தில் குருசேத்திரப் போரில், அர்ச்சுனன் தொடுத்த அம்புகளால் உடல் முழுவதும் துளைக்கப்பட்டு, அந்த அம்புகளே படுக்கையாக மாற யுத்த களத்தில் கிடந்தார். அந்த நேரத்தில் பாண்டவர்களுக்கு அவர் உபதேசித்ததே 'விஷ்ணு சகஸ்ரநாமம்'. புராணத்தில் உள்ள இந்த நிகழ்வை, கல்லில் நுட்பமாக செதுக்கியிருக்கும் அழகை என்னவென்று சொல்வது. கர்நாடக மாநிலம் ஹாசம் மாவட்டம் பேளூரில் உள்ள சென்னகேசவ கோவிலில் தான் இந்தக் காட்சி இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்