தைப்பூச விரதம் இருப்பது எப்படி?

முருகப்பெருமானை நினைத்து தைப்பூச விரதம் இருந்தால், பகை அழியும். நவக்கிரக தோஷம் நம்மை நெருங்காது.;

Update:2024-01-23 13:25 IST

தைப்பூசம் அன்று காலையில் எழுந்து குளித்து தூய்மையான உடை உடுத்தி முருகப்பெருமானை வழிபட வேண்டும். முருகப்பெருமான் படத்திற்கு அல்லது விக்ரகத்திற்கு முருகப்பெருமானின் நாமங்களைச் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய் படைத்து, சுவாமிக்கு நைவேத்தியம் செய்வது நல்லது. சிலர் அன்று முழுவதும் எதையும் சாப்பிடாமல் உபவாசம் இருப்பார்கள். சிலர் பாலும் பழமும் மட்டும் எடுத்துக்கொண்டு, ஒரு பொழுது சாப்பிட்டு விரதம் இருப்பார்கள். தைப்பூசம் அன்று முருகப்பெருமான் ஆலயம் சென்றும் வழிபட்டு வரலாம்.

அன்றைய தினம் தேவையற்ற வார்த்தைகளை பேசுவதோ, கோபப்படுவதோ, வீண் விவாதங்கள் செய்வதோ கூடாது. முருகப்பெருமான் நாமத்தை மட்டுமே சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். முருகப்பெருமானை நினைத்து தைப்பூச விரதம் இருந்தால், பகை அழியும். நவக்கிரக தோஷம் நம்மை நெருங்காது. குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பேறு கிடைக்கும். நீதிமன்ற வழக்குகள் சாதகமாக முடியும்.

சுப்பிரமணிய ஷோடச நாமாவளி

1. ஓம் ஞானசக்த்யாதமனே நம:

2. ஓம் ஸ்கந்தாய நம:

3. ஒம் அகனி காபாய நம:

4. ஓம் பாகுலேயாய நம:

5. ஓம் காகநேயாய நம:

6. ஓம் சரவணோத் பவாய நம:

7. ஓம் கார்த்திகேயாய நம:

8. ஓம் குமாராய நம:

9. ஓம் ஷண்முகாய நம:

10. ஓம் குக்குடத்வஜாய நம:

11. ஓம் சேனான்யே நம:

12. ஓம் குஹாய நம:

13. ஓம் பிரும்ம சாரிணே நம:

14. ஓம சிஜதேஜஸே நம:

15. ஓம் கௌஞ்சதாரிணே நம:

16. ஓம் சிகி வாகனாய நம

Tags:    

மேலும் செய்திகள்