ஆன்மீகம்- சந்தேகம் தெளிவோம்

இறைவன் வீற்றிருக்கும் ஆலயத்திற்குள், அவரே உயர்ந்தவர். அவரைத் தவிர்த்து மற்றவர்களை நாம் வணங்குவது முறையாக இருக்காது. கோவில் வளாகத்திற்குள் தான தர்மங்களைச் செய்வதை தவிர்ப்பதே சிறந்தது.

Update: 2022-06-28 10:21 GMT

நாம் கோவிலுக்குள் இருக்கும் போது, அங்கு சந்திக்கும் நமக்குத் தெரிந்த மரியாதைக்குரிய மனிதர்களை வணங்கலாமா? என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. இந்த உலகத்தில் இறைவனே மிகப்பெரியவன். அவனுக்கு மிஞ்சி எந்த உயிரினமும், இயற்கையும் இல்லை. அப்படிப்பட்ட இறைவன் வீற்றிருக்கும் ஆலயத்திற்குள், அவரே உயர்ந்தவர். அவரைத் தவிர்த்து மற்றவர்களை நாம் வணங்குவது முறையாக இருக்காது.

அதுபோல மிகப்பெரிய ஆலயங்களில் பிரகாரங்களிலேயே, சிலர் தர்மம் கேட்டுக் கொண்டிருப்பதை பலரும் பார்த்திருக்கலாம். அவர்களுக்கு சிலர் தர்மம் அளிக்கவும் செய்வார்கள். அதுவும் சரியல்ல.. ஆலயத்திற்கு வெளியே யாருக்கு வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் தான தர்மம் செய்யலாம். ஆனால் ஆலயத்திற்குள், அனைவருமே இறைவனிடம் எதையாவது கேட்டு, கோரிக்கை வைத்தபடிதான் வழிபாட்டை செய்கிறோம். அங்கே இறைவன் ஒருவன்தான் கொடுக்கக்கூடிய இடத்தில் இருக்கிறார். அவருக்கு நிகராக, நாமும் கோவில் வளாகத்திற்குள் தான தர்மங்களைச் செய்வதை தவிர்ப்பதே சிறந்தது.

Tags:    

மேலும் செய்திகள்