முத்தியால்பேட்டை மூலஸ்த்தம்மன் கோவிலில் ஆடி திருவிழா

முத்தியால்பேட்டை மூலஸ்த்தம்மன் கோவிலில் ஆடி திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

Update: 2023-08-08 10:52 GMT

காஞ்சீபுரத்தை அடுத்த முத்தியால்பேட்டையில் பிரசித்தி பெற்ற மூலஸ்த்தம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 23-வது ஆடித்திருவிழா காஞ்சீபுரம் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், தொழிலதிபருமான முத்தியால்பேட்டை ஆர்.வீ.ரஞ்சித்குமார் ஏற்பாட்டின் பேரில் வெகு சிறப்பாக நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு திருவிழாவையொட்டி 4 டன் ஆப்பிள் காஷ்மீரில் இருந்து வரவழைக்கப்பட்டு அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. ஆப்பிள் அலங்காரத்துடன் சப்பரத்தில் மூலஸ்த்தம்மன் கம்பீரமாக காட்சியளித்தார். பின்னர் மேளதாள வாத்தியங்கள் முழங்க நகரின் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.வீ.ஜோதியம்மாள், முத்தியால்பேட்டை ஒன்றிய கவுன்சிலர் பிரேமா ரஞ்சித் குமார், மாமன்ற உறுப்பினர் ஷாலினி வேலு, முத்தியால்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், வக்கீல் ஆர்.வீ.உதயன், மாவட்ட கட்சி அவைத்தலைவர் எஸ்.ரங்கநாதன், பொருளாளர் ஏ.வஜ்ஜிரவேல், துணை செயலாளர் சோமங்கலம் ரமேஷ், தேவரியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் த.அஜய்குமார், எலும்பு முறிவு டாக்டர் அருண்பிரசாத், மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர். விழாவினையொட்டி கிராமம் முழுவதும் வண்ண வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மாவிலை, வேப்பிலை, தோரணங்கள் கட்டி திருவிழா கோலம் பூண்டு ரம்மியமாக காட்சியளித்தது.

Tags:    

மேலும் செய்திகள்