10 வரி பாடலாக ராமாயணம்
காஞ்சி மகா பெரியவர் ராமனின் புகழ்பாடும் ராமாயண காவியத்தை 10 வரிகளைக் கொண்ட பாடலாக உலகத்திற்கு அருளியுள்ளார்.
ராமனின் புகழ்பாடும் ராமாயண காவியத்தை முழுவதும் படித்தால், மிகப்பெரிய புண்ணியம் கிடைக்கப்பெறும். ஆனால் இன்றைய அவசர காலத்தில் அதை பொறுமையாக அமர்ந்து படிக்க எவருக்கும் நேரம் இல்லை. இப்படி ஒரு காலம் வரும் என்பதை முன்கூட்டியே அறிந்து கொண்டதாலோ என்னவோ, காஞ்சி மகா பெரியவர் என்று அழைக்கப்படும் சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள், அந்த அரிய பொக்கிஷத்தை, வெறும் 10 வரிகளைக் கொண்ட பாடலாக உலகத்திற்கு அருளியுள்ளார்.
'ஸ்ரீ ராமம் ரகுகுல திலகம்
சிவதனு சாக்ரிஹத சீதா ஹஸ்தகரம்
அங்குல்யா பரண சோபிதம்
சூடாமணி தர்சனகரம்
ஆஞ்சநேய மாஸ்ரயம்
வைதேஹி மனோகரம்
வானர சைன்ய சேவிதம்
சர்வமங்கள கார்யானுகூலம்
சததம் ஸ்ரீ ராமச்சந்திர பாலயமாம்
ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய்ஸ்ரீராம்'
இந்த சுலோகத்தை தினமும் எத்தனை முறை வேண்டுமானாலும் பாராயணம் செய்யலாம். ஒவ்வொரு முறை இந்த சுலோகத்தைச் சொல்லும் போதும், ஒரு முறை ராமாயணத்தை வாசித்து முடித்த பெரும் புண்ணியம் நமக்குக் கிடைக்கப்பெறும் என்று சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் கூறியிருக்கிறார்.