ரஷியாவுக்கு எதிராக கருங்கடலில் 'பெரிய வெற்றியை' பெற்றுள்ளோம் - உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தகவல்

உக்ரேனிய கருங்கடலில் ரஷிய கடற்படை கிட்டத்தட்ட முழு ஆதிக்கத்தையும் இழந்துவிட்டதாக ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

Update: 2023-12-19 23:36 GMT

Image Courtacy: AFP

கீவ்,

ரஷிய போர்க்கப்பல்கள் மீது வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தி, கடல்சார் வர்த்தக பாதைகளை பாதுகாத்துள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.

இதுதொடர்பாக நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "உக்ரைனின் ராணுவம் கருங்கடலில் "பெரிய வெற்றியை" பெற்றுள்ளது. அங்கு ரஷிய போர்க்கப்பல்கள் மீது வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தி, கடல்சார் வர்த்தக பாதைகளை உக்ரைன் பாதுகாத்துள்ளது.

உக்ரேனிய கருங்கடலில் ரஷிய கடற்படை கிட்டத்தட்ட முழு ஆதிக்கத்தையும் இழந்துவிட்டது. நாம் என்ன செய்ய வேண்டும், என்ன ஏற்றுமதி செய்ய வேண்டும் என்பது போன்ற பலவற்றில் கட்டுப்பாடுகளை விதிக்க மாஸ்கோ முயற்சித்தது. உக்ரைனின் ராணுவத் தலைமை 4,50,000 முதல் 5,00,000 மக்களை அணிதிரட்ட முன்மொழிந்துள்ளது.

ரஷியாவுடனான போர் எப்போது முடிவடையும் என்று யாருக்கும் தெரியாது, ஆனால் உக்ரைன் உறுதியுடன் இருந்தால் விரைவாக வெற்றிபெற முடியும்" என்று அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்