சீன அதிபராக ஜின்பிங் 3வது முறையாக தேர்வு..!

சீன அதிபராக கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஷீ ஜின்பிங் 3வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்

Update: 2022-10-23 04:34 GMT


சீன அதிபராக கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஷீ ஜின்பிங் 3வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.ஒருவார கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் நடந்த ரகசிய வாக்கெடுப்பில் மீண்டும் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சீன கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய மாநாடு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும். இதில் கட்சியின் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார். அவரே அதிபராக இருப்பார்.. இதில் சீன கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய மாநாடு கடந்த 16-ந்தேதி தலைநகர் பிஜீங்கில் தொடங்கியது. .ஒரு வாரம் நடந்த இந்த மாநாடு நேற்று முடிவடைந்தது.

ரகசிய வாக்கெடுப்பு மூலம் நடத்தப்பட்ட இந்த தேர்வு முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதில் ஜின்பிங் மீண்டும் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் ஜின்பிங் 3-வது முறையாக அதிபராக தேர்வாகிறார்.

3வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளள ஜின்பிங் கட்சி பொதுச்செயலாளராகவும் ,அதிபராகவும் மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பார்.சீன கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய மாவோவுக்கு பிறகு அதிக காலம்  அதிபராக இருப்பவர் என்ற      பெருமையை ஜின்பிங் பெறுகிறார் 

Tags:    

மேலும் செய்திகள்