ரஷிய எண்ணெய்க்கு மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள விலை வரம்பு அமல்

ரஷிய எண்ணெய்க்கு ஐரோப்பிய ஒன்றியம், ஜி7 நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் விதித்துள்ள விலை வரம்பு அமலுக்கு வந்துள்ளது.

Update: 2022-12-08 17:21 GMT

பெர்லின்,

ஜி7 நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா ரஷியாவின் கடல்வழி கச்சா எண்ணெய் விலையை பீப்பாய் ஒன்றுக்கு 60 அமெரிக்க டாலர் என்ற அளவுக்கு ஒப்பந்தம் செய்தன. இந்த திட்டத்திற்கு ஒப்புக்கொண்ட ஐரோப்பிய ஒன்றியம் ரஷிய எண்ணெய்க்கான சராசரி சந்தை விலையை விட குறைந்தது 5 சதவீதம் உச்சவரம்பு குறைவாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.

இதன்படி ரஷிய எண்ணெய்க்கு ஐரோப்பிய ஒன்றியம், ஜி7 நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் விதித்துள்ள விலை வரம்பு அமலுக்கு வந்துள்ளது. எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 60 அமெரிக்க டாலருக்கு மேல் விற்கப்பட்டால், ரஷிய எண்ணெய் ஏற்றுமதிக்கான காப்பீடு, நிதி மற்றும் பிற சேவைகள் தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

மேற்கு நாடுகள் முன்மொழிந்த இந்த நடவடிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் ரஷிய துணை பிரதமர் அலெக்சாண்டர் நொவோக், உற்பத்தியை குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டாலும் விலை வரம்புக்கு உட்பட்ட எண்ணெயை ரஷியா விற்பனை செய்யாது என்று கூறினார். மேலும் விலை வரம்பு அதிகரிப்பு ரஷியாவை பாதிக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்