மேற்கத்திய நாடுகள் உதவி : உக்ரைன் மக்களின் துன்பம் மட்டுமே நீடிக்கும் - ரஷியா கருத்து

மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவி வழங்கி வருவதால் உக்ரைன் மக்களின் துன்பம் மட்டுமே நீடிக்கும் என ரஷியா கருத்து தெரிவித்துள்ளது.

Update: 2023-01-10 04:00 GMT

மாஸ்கோ,

உக்ரைன் நாட்டின் மீதான ரஷியாவின் போர் ஓர் ஆண்டை நெருங்கி கொண்டிருக்கிறது. ஆனால் போர் முடிவுக்கு வருவதற்கான எந்த சூழலும் தென்படவில்லை. மாறாக இருதரப்பும் நாளுக்குநாள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றன.

உக்ரைன் ரஷியாவின் தாக்குதலை எதிர்கொண்டு பதில் தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்க முக்கிய பங்காற்றி வருகிறது. குறிப்பாக உக்ரைனுக்கு பல பில்லியன் டாலர் மதிப்புள்ள ராணுவ உதவிகளை வழங்கி வருகிறது. மேலும் உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டோ நாடுகளும் உதவிக்கரம் நீட்டி வருகிறது. இந்தநிலையில்,

மேற்கத்திய நாடுகள் உக்ரைனைக்கு ஆயுத உதவி வழங்கி வருவதால் உக்ரைன் மக்களின் துன்பம் மட்டுமே நீடிக்கும். உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதால் எந்த மாற்றமும் நிகழ்ந்து விடாது என ரஷியா கருத்து தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்