எந்தவொரு எதிரியையும் தண்டிக்காமல் நாங்கள் விடமாட்டோம் - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

உக்ரைனின் மீட்சியை வலுப்படுத்தியவர்களுக்கும், வலுப்படுத்தி வருபவர்களும் அனைவரும் ஒன்றிணைவோம் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

Update: 2023-04-02 04:59 GMT

கீவ்,

உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போர் ஓராண்டை கடந்துள்ளது. ஓராண்டுக்கு பின்பும் இரு நாடுகளுக்கு இடையேயான ராணுவ தாக்குதல்கள் நீடித்து வருகின்றன. இதற்கிடையே, உக்ரைன் போர் தொடங்கி 400 நாட்கள் நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வீடியோவில் தோன்றி பேசியதாவது:-

ரஷியாவின் போரில் உக்ரைன் நிச்சயம் வெற்றி பெறும். நிலங்களை மீட்பதிலும் வெற்றி பெறுவோம். நீதியை மீட்டெடுப்பதிலும் நாங்கள் வெற்றி பெறுவோம். எந்தவொரு எதிரியையும் தண்டிக்காமல் நாங்கள் விடமாட்டோம். அதற்கான தகவலை சேகரித்து வருகிறோம். முழு அளவிலான ஆக்கிரமிப்புக்கு எதிரான எங்களது பாதுகாப்பு நடவடிக்கைகள் 400 நாட்களாக தொடர்ந்து வருகின்றன.

நாங்கள் ஒரு பெரிய பாதையில் நடந்து வந்துள்ளோம். உக்ரைனுக்காக போரிட்ட மற்றும் போரிட்டு வரும், நாடு மற்றும் நாட்டு மக்களை கவனத்துடன் பாதுகாத்த மற்றும் பாதுகாத்து வரும், உதவி செய்து மற்றும் தொடர்ந்து எங்களது பாதுகாப்பு தளவாடங்களுக்கு உதவி வரும், உக்ரைனின் மீட்சியை வலுப்படுத்தியவர்களுக்கும், வலுப்படுத்தி வருபவர்களும் அனைவரும் ஒன்றிணைவோம்.

உக்ரைன் பயங்கர நாட்களை கடந்து வந்தது. இந்த குளிர்காலத்திலும் நாங்கள் தப்பி வந்துள்ளோம். இந்த வார்த்தைகளுக்கு பின்னால், பெரிய முயற்சிகள் இருந்துள்ளன. கீவ், செர்னிஹிவ் மற்றும் சுமி பகுதிகள், எங்களுடைய கார்கிவ் பகுதிக்கு மீண்டும் நாங்கள் திரும்பி வந்துள்ளது, கெர்சன் நகருக்கு திரும்பி வந்தது, பாக்முத் மற்றும் தொன்பாஸ் நிலங்களை பாதுகாத்தது, என்பது உக்ரைனியர்களின் வீரம். இதனை இந்த உலகம் மறக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்