நிதியுதவி அளித்தால் ரஷிய போருக்கு விரைவில் முடிவு கட்டுவோம் - உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி பேச்சு

கூடுதல் நிதியுதவி கிடைத்தால் ரஷியாவுடனான போர் விரைவில் முடிவுக்குக் கொண்டு வரப்படும் என்று உக்ரைன் அதிபர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Update: 2022-10-13 12:23 GMT

கீவ்,

சர்வதேச அளவில் கூடுதல் நிதியுதவி கிடைத்தால் ரஷியாவுடனான போர் விரைவில் முடிவுக்குக் கொண்டு வரப்படும் என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நம்பிக்கை தெரிவித்துள்ளார். ரஷிய குண்டுவெடிப்பால் அழிக்கப்பட்ட பள்ளிகள் மற்றும் வீடுகளை மீண்டும் கட்டுவதற்கு அதிக பணம் தேவை என்பதால் ஜெலன்ஸ்கி நிதியுதவி கோரியுள்ளார்.

வாஷிங்டனில் நடைபெற்ற உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்திர கூட்டத்தில் நிதியமைச்சர்களுடன் காணொலி வாயிலாக பேசிய ஜெலன்ஸ்கி, உக்ரைனை மீண்டும் கட்டமைக்க பல லட்சம் கோடி ரூபாய் தேவைப்படுவதாக வலியுறுத்தினார்.

மேலும் உக்ரைனுக்கு இப்போது எவ்வளவு உதவி கிடைக்கிறதோ, அவ்வளவு சீக்கிரமாக ரஷிய போரை முடிவுக்கு கொண்டு வரமுடியும் என்றும் இதுபோன்ற கொடூரமான போர் மற்ற நாடுகளுக்கு பரவாது என்பதற்கு விரைவில் நம்பகத்தன்மையுடன் உத்தரவாதம் அளிப்போம் என்றும் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்