பெலாரசுக்குச் செல்கிறார், வாக்னர் தலைவர்: அவர் மீதான வழக்கு கைவிடப்படும் - கிரெம்ளின் அறிவிப்பு

வாக்னர் தலைவர் பெலாரசுக்குச் செல்ல உள்ளதாகவும், அவர் மீதான வழக்குகள் கைவிடப்படும் என்றும் கிரெம்ளின் அறிவித்துள்ளது.

Update: 2023-06-24 21:09 GMT

Image Courtacy: AFP

மாஸ்கோ,

ரஷியா - உக்ரைன் போர் கடந்த 1 வருடங்களுக்கு மேல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போரில் ரஷிய பாதுகாப்பு படையினருடன் இணைந்து 'வாக்னர்' எனப்படும் தனியார் ராணுவ அமைப்பு உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வந்தது. ஆனால் இந்த ராணுவ குழு தற்போது ரஷியாவிற்கு எதிராக திரும்பி உள்ளது

சமீபகாலமாக ரஷிய ராணுவ அதிகாரிகள் மீதும், வாக்னர் அமைப்பின் மீதும் தொடர்ந்து அடக்குமுறைகளை செயல்படுத்தி வருவதாக இந்த அமைப்பின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஸ் தெரிவித்திருந்தார். மேலும் உக்ரைனுக்கு எதிரான போரின் போது தங்களுக்கு சரியான ஆயுதங்களை வழங்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில் வாக்னர் அமைப்பு தற்போது ரஷியாவுக்கு எதிராக திரும்பி உள்ளது.

இதற்கிடையே வாக்னர் அமைப்பு ரஷியாவின் ரோஸ்டோவ்-ஆன்-டான் ராணுவ கட்டுப்பட்டு மையத்தை கைப்பற்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனால் கோபமடைந்த ரஷியா, கடும் எச்சரிக்கையை விடுத்தது. இந்த அமைப்பின் தலைவர் யெவ்ஜெனி புரிகோஸை கைது செய்யவும் கிளர்ச்சியாளர்களை கண்டதும் சுடவும் உத்தரவிட்டிருந்தது. ரஷியா முழுவதும் ராணுவ படையினர் குவிக்கப்பட்டு தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.

இந்த சூழலில் வாக்னர் குழு ரஷியாவின் ரோஸ்டோவ்-ஆன்-டானிலிருந்து வீரர்களைத் திரும்பப் பெறத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டுள்ளதாக கூறியதைத் தொடர்ந்து, உயிரிழப்புகளைத் தவிர்ப்பதற்காக தனது படைகள் வெளியேறுவதாக வாக்னர் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் தெரிவித்தார்.

இந்நிலையில் வாக்னர் தலைவர் பெலாரசுக்குச் செல்ல உள்ளதாகவும், அவர் மீதான வழக்குகள் கைவிடப்படும் என்றும் வாக்னர் கலகம் உக்ரைன் தாக்குதல் திட்டங்களை பாதிக்காது என்றும் ரஷிய அதிபர் மாளிகையான கிரெம்ளின் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், " கிளர்ச்சியாளர்களால் ஏற்பட்ட பதட்டத்தைத் தணிக்கும் வகையில் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, தனியார் ரஷிய இராணுவ நிறுவனமான வாக்னர் குழு தலைவர் அண்டை நாடான பெலாரசுக்குச் செல்கிறார். மேலும் அவர் மீதான கிரிமினல் வழக்கு மூடித்து வைக்கப்பட்டது. வாக்னர் கலகம் உக்ரைன் தாக்குதல் திட்டங்களை பாதிக்காது. வாக்னர் படை வீரர்களை ரஷியா தண்டிக்காது. அவர்களின் வீரச் செயல்களை நாங்கள் எப்போதும் மதிக்கிறோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்