காபோன் வாழ் இந்தியர்களுடன் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சந்திப்பு

காபோனில் வாழும் இந்தியா்களுடன் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்துரையாடினாா்.

Update: 2022-06-01 01:33 GMT

லிப்ரெவில்லி,

இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அரசு முறை பயணமாக ஆப்பிரிக்க நாடுகளான காபோன், செனகல் மற்றும் மத்திய கிழக்கு நாடான கத்தாருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

அந்த வகையில் காபோனில் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்களை வெங்கையா நாயுடு நேற்று சந்தித்து உரையாடினாா். அவா் பேசுகையில், மக்களை மகிழ்ச்சியடையச் செய்வதே அரசாங்கத்தின் நோக்கம். சீர்திருத்தங்கள் காலத்தின் தேவை என்றும் கூறினார். காபோனில் 1,500 இந்தியர்கள் மட்டுமே இருந்தபோதிலும், பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளீர்கள் என்பதைக் குறிப்பிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்," என்றார்.

முன்னதாக, காபோன் அதிபர் அலி பாங்கோ ஒண்டிம்பா, பிரதமர் ரோஸ் கிறிஸ்டியன் ஒசோகா ரபோண்டாவை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சந்தித்தார். அப்போது இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது ஆலோசிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்