தீவிரமடையும் போருக்கு மத்தியில் உக்ரைனுக்கு மேலும் ராணுவ உதவியை அறிவிக்கும் அமெரிக்கா..
உக்ரைனுக்கு ஆதரவாக புதிய ராணுவ உதவியை இன்று அறிவிக்கும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
வாஷிங்டன்,
உக்ரைன் - ரஷியா இடையிலான போர் ஒரு வருடங்களை கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சிறிய நாடான உக்ரைன், பல்வேறு நாடுகளின் உதவி மற்றும் அமெரிக்காவின் ராணுவ உதவியுடனும் தொடர்ந்து சண்டை செய்து வருகிறது.
இந்த சூழலில், உக்ரைனுக்கு ஆதரவாக புதிய ராணுவ உதவியை இன்று அறிவிக்கும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, புதிய ராணுவ உதவியின் மதிப்பு இன்னும் வெளிடவில்லை என்றும், மேலும் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறினார்.