அமெரிக்கா: செலவின மசோதாவிற்கு அனுமதி

அமெரிக்காவில் செலவின மசோதா நிறைவேற்ற அனுமதி கிடைத்துள்ளது.

Update: 2023-10-01 05:01 GMT

வாஷிங்டன்,

உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவில் பொதுப்பணிகளுக்கு செலவிடுவதற்காக ஆண்டுதோறும் நிதி ஒதுக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிதியளிப்பு மசோதா நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி கையெழுத்திட்ட பிறகே பொதுப்பணிகளுக்கு நிதி ஒதுக்கப்படும்.

இந்த சூழலில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் குடியரசு கட்சியினர், உக்ரைன் போருக்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட மிகப்பெரிய செலவினங்களைக் குறைத்தாலொழிய நிதியளிப்பு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கமாட்டோம் என கூறி மசோதாவை நிறைவேற்ற விடாமல் முடக்கினர்.

இந்தநிலையில் அரசு பணிகளுக்கான செலவினத்துக்கு ஒப்புதல் அளிக்கும் மசோதா நிறைவேற்ற அனுமதி கிடைத்ததால் முடங்கும் அபாயத்தில் இருந்து அமெரிக்க அரசு தப்பியது. உக்ரைனுக்கு உதவ வேண்டாம் என்ற நிபந்தனையுடன் நிதியளிப்பு மசோதா நிறைவேற்ற ஒப்புதல் கிடைத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்