ஜி7 மாநாடு: பிரதமர் மோடியின் தோளில் தட்டி அழைத்து கைகுலுக்கிய அமெரிக்க அதிபர் பைடன்! -வீடியோ வைரல்

பிரதமர் மோடியை வாழ்த்துவதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவரை பின்பக்கத்திலிருந்து தட்டி அழைத்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Update: 2022-06-27 13:01 GMT

பெர்லின்,

ஜெர்மனியில் உள்ள ஸ்க்லோஸ் எல்மாவ் நகரில் நடைபெறும் ஜி7 மாநாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார். இந்த ஆண்டுக்கான மாநாடு, ஜெர் மனியின் எல்மாவ் நகரில் 2 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டது.

அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகள் ஜி-7 நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன. நேற்று மாநாடு தொடங்கியது. இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உள்பட 7 நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் ஜி-7 நாடுகள் மாநாட்டில் பங்கேற்க ஜெர்மனிக்கு சென்ற பிரதமர் மோடியை ஜெர்மனி பிரதமர் ஒலாஃப் ஸ்கால்ஸ் கைகுலுக்கி வரவேற்றார்.

ஜி-7 நாடுகள் உச்சி மாநாட்டிற்கு சென்றுள்ள பிரதமர் மோடி, ஏழு நாடுகளின் தலைவர்கள் கொண்ட குழுவினர் உடன் சேர்ந்து, அனைவரும் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

புகைப்படம் எடுத்துக்கொண்ட பின், அனைத்து தலைவர்களும் ஒருவருக்கொருவர் கைக்குலுக்கி வாழ்த்து தெரிவித்து கொண்டு அங்கிருந்து விடைபெற்றனர்.

அப்போது எதிர்பாராத விதமாக, பிரதமர் மோடியை வாழ்த்துவதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேரில் சென்றார். அவரை பின்பக்கத்திலிருந்து தோளை தட்டி அழைத்து, தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்திய பிரதமரை காண, அமெரிக்க அதிபர் தானாக சென்று அவரை அழைத்து வாழ்த்தியிருப்பது உலக அரங்கில் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது. இந்த வீடியோ இப்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்