ஜோ பைடனின் திடீர் உக்ரைன் பயணம் ஏன்? - வெள்ளை மாளிகை விளக்கம்
அமெரிக்க அதிபர் ஜோ படைன் திடீர் பயணமாக உக்ரன் தலைநகர் கீவ் நகருக்கு சென்றது குறித்து வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
வாஷிங்டன்,
உக்ரைன் - ரஷியா இடையே நடைபெற்று வரும் போர் ஓராண்டு கடந்த நிலையில் கீவ் நகருக்கு சென்றார் ஜோ பைடன்.
இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஐரோப்பிய சுற்றுப்பயணத்தில் முதலில் பைடன் போலந்து செல்ல திட்டமிட்டருந்தார். எதிர்பாராதவிதமாக முதலில் உக்ரைன் தலைநகர் கீவ் சென்றடைந்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி ஓராண்டு ஆகும் நிலையில் பைடன் சென்றுள்ளதாக வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
உக்ரைன் அதிபதிர் ஜெலென்ஸ்கியுடன் அமெரிக்க அதிபர் பைடன் கீவ் நகரில் நடந்து செல்லும் காட்சிகள் வெளியாகின.
உக்ரைன் - ரஷியா இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் கீவ் நகருக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சென்றது ரஷியாவிற்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கூறியுள்ளனர்.