நடப்பாண்டில் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி 2.3 சதவீதமாக குறையும் - சர்வதேச நாணய நிதியம் கணிப்பு

அமெரிக்க பொருளாதார நிலைமையை பரிசீலனை செய்து சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

Update: 2022-07-19 15:20 GMT

வாஷிங்டன்,

அமெரிக்காவின் 2022-ம் ஆண்டிற்கான பொருளாதார வளர்ச்சி 2.3 சதவீதமாக குறையும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. நடப்பாண்டில் அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 3.7 சதவீதம் அதிகரிக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் கடந்த ஏப்ரல் மாதம் கணித்தது.

சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு, அமெரிக்க பொருளாதார நிலைமையை பரிசீலனை செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் முன் எப்போதும் காணாத நாணய மாற்று விகித கொள்கையின் ஆதரவுடன், அமெரிக்க பொருளாதாரம் கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பில் இருந்து வேகமாக மீட்சி அடைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் விரிவான பணவீக்கத்துடன் இந்த உயர்வேக மீட்சி, அமெரிக்கா மற்றும் உலக பொருளாதாரத்திற்கு இடர்பாடுகளை ஏற்படுத்தும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க பொருளாதார வீழ்ச்சியை தவிர்ப்பது மேன்மேலும் அதிகரிக்கும் சவாலாக அமைந்துள்ளது என்று சர்வதேச நாணய நிதியம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்