உக்ரைனுக்கு மேலும் 400 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவி - அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் உறுதி

உக்ரைனுக்கு கூடுதலாக 400 மில்லியன் டாலர் அளவிலான ராணுவ உதவிகள் வழங்கப்படும் என அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் உறுதியளித்துள்ளது.

Update: 2022-11-05 14:59 GMT

வாஷிங்டன்,

உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய ராணுவ தாக்குதல், தற்போது வரை தொடர்ந்து நீடித்து வருகிறது. இரு தரப்பிலும் மிகப்பெரிய அளவில் உயிர்சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த போரால் உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

ரஷியாவின் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வரும் நிலையில், உக்ரைனுக்கு உதவியாக இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ராணுவம் மற்றும் பொருளாதார ரீதியான உதவிகளை செய்து வருகின்றன. அதே சமயம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ரஷியா மீது வரலாறு காணாத பொருளாதார தடைகளை விதித்துள்ளன.

போர் தொடங்கி சுமார் 9 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், அமெரிக்கா இதுவரை பல ஆயிரம் கோடி மதிப்பிலான ராணுவ உதவிகளை உக்ரைனுக்கு வழங்கியுள்ளது. அந்த வகையில் மேலும் கூடுதலாக 400 மில்லியன் டாலர்(இந்திய மதிப்பில் சுமார் 3,200 கோடி ரூபாய்) அளவிலான ராணுவ உதவிகள் உக்ரைனுக்கு வழங்கப்படும் என அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் உறுதியளித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்