அமெரிக்க வெளியுறவு மந்திரியுடன் சீன வெளியுறவுத்துறை மந்திரி நேரில் சந்திப்பு
நியூயார்க் நகரில் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கனை சீன வெளியுறவு மந்திரி நேரில் சந்தித்து பேசினர்.
நியூயார்க்,
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன், சீன வெளியுறவு மந்திரி வாங் யி ஆகிய இருவரும் நேரில் சந்தித்து பேசினர். அப்போது தைவானில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பேணுவது மிகவும் முக்கியமானது என வாங் யியிடம் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்தார்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள சீனா, அமெரிக்கா மிகவும் தவறான, ஆபத்தான சமிக்ஞைகளை அனுப்புவதாக குற்றம் சாட்டியுள்ளது.