ஆஸ்திரேலியா-அமெரிக்கா கூட்டுப்போர் பயிற்சியில் ஆஸ்திரேலியாவின் ராணுவ ஹெலிகாப்டர் கடலில் விழுந்து 4 பேர் மாயம்

ஆஸ்திரேலியா-அமெரிக்கா கூட்டுப்போர் பயிற்சியில் ஆஸ்திரேலியாவின் ராணுவ ஹெலிகாப்டர் கடலில் விழுந்து 4 பேர் மாயமாயினர்.

Update: 2023-07-29 20:07 GMT

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தை மையமாக கொண்டு ஆஸ்திரேலியா-அமெரிக்கா இடையே 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூட்டுப்போர் பயிற்சி நடந்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டு நடைபெற்ற பயிற்சியில் 13 நாடுகளில் இருந்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் பங்கேற்றனர்.

இந்தநிலையில் லிண்ட்மேன் என்ற தீவு அருகே சென்றபோது ஆஸ்திரேலியாவின் எம்.ஆர்.எச். தைவான் என்ற ராணுவ ஹெலிகாப்டர் கடலில் விழுந்தது. இதனையடுத்து அந்த ஹெலிகாப்டரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. இதில் அங்குள்ள டெண்ட் தீவு அருகே ஹெலிகாப்டரின் சிதைந்த பாகங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அதில் இருந்த 4 ராணுவ வீரர்களின் கதி என்ன? என்பது இன்னும் தெரியவில்லை. எனவே அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்