ராணுவத்தை மேம்படுத்த தைவானுக்கு அமெரிக்கா உதவி
தைவானுக்கு ராணுவ உதவியாக சுமார் ரூ.2 ஆயிரம் கோடி வழங்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார்.
சீனா-தைவான் இடையே கடந்த சில மாதங்களாகவே போர்ப்பதற்றம் நிலவி வருகிறது. தைவானை இன்னும் தங்களது நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என கூறி வரும் சீனா அவ்வப்போது அதன் எல்லையில் போர் விமானங்களை பறக்க விடுகிறது. மேலும் தைவானுடன் மற்ற நாடுகள் தூதரக உறவு வைத்துக்கொள்ளக்கூடாது எனவும் சீனா எச்சரித்துள்ளது. ஆனால் துவக்கம் முதலே தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்பட்டு வருகிறது.
இந்தநிலையில் தைவானுக்கு ராணுவ உதவியாக சுமார் ரூ.2 ஆயிரம் கோடி வழங்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார். தைவானில் தற்போதைய நிலை தொடர வேண்டும் என்பதற்காகவே இந்த உதவி வழங்கப்படுவதாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.