ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா உள்பட சிறந்த பிரதிநிதிகள் தேவை: ஐ.நா. தலைவர்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா உள்ளிட்ட சிறந்த பிரதிநிதித்துவ நாடுகள் தேவையாக உள்ளன என ஐ.நா. பொது சபை தலைவர் கூறியுள்ளார்.

Update: 2023-06-20 02:52 GMT

நியூயார்க்,

ஐ.நா. பொது சபை தலைவர் சாபா கொரோசி அளித்த பேட்டியொன்றில், அமைதி, மக்களின் நல்வாழ்வு ஆகியவற்றுக்கான பெரிய பொறுப்புகளை கொண்டுள்ள நாடுகளை உள்ளடக்கிய உறுப்பினர்கள், பாதுகாப்பு கவுன்சிலின் சிறந்த பிரதிநிதித்துவத்திற்கு தேவையாக உள்ளன என கூறியுள்ளார்.

அவற்றில் உலக மக்களின் வசதிக்காக பங்காற்றுவோம் என்ற நம்பிக்கை கொண்டுள்ள இந்தியா போன்ற நாடுகளும் அடங்கும் என்று அவர் கூறியுள்ளார்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தொடங்கப்பட்ட கடந்த காலத்தில், பெரிய நாடுகளில் ஒன்றாக இந்தியா இல்லை. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும் என அவர் கூறியுள்ளார்.

சீர்திருத்தத்திற்கு தேவையான ஆற்றல்மிக்க முதல் விவாதம் தொடங்கி 40 ஆண்டுகளுக்கும் கூடுதலாகி உள்ளது. அதற்கான பேச்சுவார்த்தைக்கான நடைமுறை 13 ஆண்டுகளாக, மிக நீண்ட காலம் நடந்து வருகிறது. எனினும், அது உறுப்பினர் நாடுகளின் கைகளில் உள்ளது என அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்