உக்ரைன் போர் எதிரொலி: நோபல் பரிசளிப்பு விழாவில் பங்கேற்க ரஷியா, பெலாரஸ், ஈரானுக்கு அழைப்பு இல்லை என அறிவிப்பு

நோபல் பரிசளிப்பு விழாவிற்கு ரஷ்யா மற்றும் அதன் கூட்டணி நாடுகளுக்கு அழைப்பு இல்லை என நோபல் அறக்கட்டளை அறிவித்துள்ளது.;

Update:2023-09-04 02:10 IST

ஸ்டாக்ஹோம்,

கடந்த ஆண்டு நோபல் பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்கு ரஷியா, பெலாரஸ் ஆகிய நாடுகளின் தூதர்களுக்கு நோபல் அறக்கட்டளை அழைப்பு விடுக்கவில்லை. உக்ரைன் மீதான படையெடுப்பு காரணமாக, ரஷியா மற்றும் அதன் கூட்டணி நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என நோபல் அறக்கட்டளை தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 31-ந்தேதி நோபல் அறக்கட்டளை சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், கடந்த ஆண்டு புறக்கணிக்கப்பட்ட நாடுகளின் தூதர்கள் இந்த ஆண்டு அழைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்புக்கு சுவீடன் நாட்டைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

மேலும் சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நடைபெற உள்ள நோபல் பரிசளிப்பு விழாவை புறக்கணிப்பதாக அங்குள்ள அரசியல் கட்சிகள் அறிவித்தன. இதனையடுத்து ரஷ்யா, ஈரான் மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளின் தூதர்களுக்கு நோபல் பரிசளிப்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படாது என நோபல் அறக்கட்டளை அறிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்