போர் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்த நிலையில், புதிய கரன்சிகளை வெளியிட்ட உக்ரைன்

போர் தொடங்கி ஓராண்டு நிறைவடைவதையொட்டி உக்ரைன் மத்திய வங்கி புதிய கரன்சி அச்சடித்து வெளியிட்டுள்ளது.;

Update:2023-02-24 00:55 IST

கீவ்,

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா நடத்தி வரும் போர் ஓர் ஆண்டை நிறைவு செய்ய உள்ளது. போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் நிதியுதவி வழங்கி வருகின்றன.

ரஷியா, உக்ரைன் இடையே பனிப்போர் நிலவியதன் தொடர்ச்சியாக 2022 பிப்ரவரி- 24ம் தேதியில் உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்தது. இந்நிலையில், போர் தொடங்கி ஓராண்டு நிறைவடைவதையொட்டி உக்ரைன் மத்திய வங்கி நேற்று புதிய கரன்சி அச்சடித்து வெளியிட்டுள்ளது.

தேசிய கொடி பின்னணியில் 20 ஹிர்வ்னியா ( 0.54 அமெரிக்க டாலர்) மதிப்பு கரன்சியை வெளியிட்டுள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்