ராணுவத்தில் சேரும் வயதுடைய ஆண்கள் புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க உக்ரைன் தடை

உக்ரைனில் ராணுவத்தில் சேரும் வயதுடைய ஆண்கள் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-04-25 21:12 GMT

கோப்புப்படம்

கீவ்,

ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 3-வது ஆண்டாக தொடர்ந்து வருகிறது. இந்த போரில் இருநாட்டு ராணுவமும் பல்லாயிரக்கணக்கான ராணுவ வீரர்களை இழந்துள்ளது. இதனால் இருநாடுகளுமே போர் முனையில் சண்டையிடுவதற்கு கட்டாய ராணுவ சேவை மூலம் ஆட்களை சேர்த்து வருகிறது.

இந்த நிலையில் உக்ரைனில் ராணுவத்தில் சேரும் வயதுடைய ஆண்கள் வெளிநாடு செல்வதற்கு அந்த நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

இது தொடர்பாக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், "ராணுவ சேவைக்கு தகுதியுடைய 18 முதல் 60 வயதுடைய ஆண் உக்ரைனியர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதற்கான பாஸ்போர்ட்டுகளை பெற முடியாது. மே 18-ந் தேதி வரை செல்லுபடியாகும் புதிய விதிகள், ராணுவ சட்டத்தின் போது உக்ரைன் எல்லையை கடக்க அனுமதிக்கப்படும் உக்ரைனிய ஆண்களுக்கு பொருந்தாது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்