துருக்கி நிலநடுக்கம்; இடிபாடுகளில் சிக்கிய கானா கால்பந்து வீரர் பத்திரமாக மீட்பு
நிலநடுக்கத்தில் மாயமான கானாவைச் சேர்ந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியன் அட்சு பத்திரமாக மீட்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அங்காரா,
துருக்கி- சிரியா எல்லையில் நேற்று முன்தினம் அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் துருக்கி, சிரியாவில் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. இந்த நிலநடுக்கம் இஸ்ரேல், லெபனான் போன்ற அண்டை நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது.
இந்நிலையில் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவைச் சேர்ந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியன் அட்சு இடிபாடுகளுக்குள் புதைந்தார். இதனால் அவரது ரசிகர்கள் பெரும் கவலையில் ஆழ்ந்த நிலையில், 31 வயதான கிறிஸ்டியன் அட்சு ஹடேயில் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக துருக்கிக்கான கானா தூதர் தகவல் தெரிவித்துள்ளார்.