"நம் நாடு நரகமாக போகிறது" கைதுக்கு பிறகு டொனால்டு டிரம்ப் ஆதரவாளர்களிடையே ஆவேச பேச்சு

"நம் நாடு நரகமாக போகிறது" கைதுக்கு பிறகு டொனால்டு டிரம்ப் ஆதரவாளர்களிடையே ஆவேசமாக பேசினார்.

Update: 2023-04-05 04:59 GMT

வாஷிங்டன்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் மீது 10-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் புகார் தெரிவித்தனர். அதற்கான வீடியோ ஆதாரங்களையும் வெளியிட்டு இருந்தனர். இதனிடையே ஆபாச பட நடிகை ஒருவர் டிரம்புடனனான உறவு குறித்து அவர் வெளியிட்ட புத்தகத்தில் பதிவு செய்திருந்தார்.

இந்த குற்றச்சாட்டை டிரம்ப் திட்டவட்டமாக மறுத்தாலும், கடந்த 2016-ம் ஆண்டு, ஜனாதிபதி தேர்தல் சமயத்தில், இந்த குற்றச்சாட்டு வெளியாகியிருந்தது. அதனால், அதன் தாக்கம் தேர்தலில் அதிகமாக எதிரொலிக்கவே செய்தது.

ஆபாச நடிகையுடனான உறவை மூடிமறைக்க, சம்பந்தப்பட்ட நடிகைக்கு டிரம்ப் பெருந்தொகை அளித்தது மற்றும் 34 பொய்யான வணிகப் பதிவுகள் வைத்தது ஆகியவை தொடர்பான குற்றச்சாட்டுகள் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீது சுமத்தப்பட்டது.

இதுதொடர்பான வழக்கில் விசாரணைக்கு டொனால்டு டிரம்ப், லோயர் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் நேற்று ஆஜரான நிலையில், அங்கு அவர் முறைப்படி கைது செய்யப்பட்டார்.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி என்ற முறையில் டிரம்ப்-க்கு கைவிலங்குகள் இடப்படவில்லை, ஆனால் மாறாக குற்றவாளிகளின் கைவிரல் அடையாளங்கள் பதிவு செய்யப்படும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிலையில், இதுவரை எந்த அமெரிக்க ஜனாதிபதியும் எதிர்கொள்ளாத கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முதல் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது புளோரிடா தோட்டத்தில் அவரது நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் முன் உரையாற்றினார்.

ஒரு அமெரிக்கராக இருப்பதில் பெருமைப்படுகிறேன். அமெரிக்காவில் இதுபோன்று எதுவும் நடக்கும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. நான் செய்த ஒரே குற்றம், நம் தேசத்தை அழிக்க நினைப்பவர்களிடம் இருந்து அச்சமின்றி நாட்டை பாதுகாப்பது தான்"

அமெரிக்கா நகரத்திற்கு போகிறது எனக்கு பெரிய ரசிகர்களாக இல்லாதவர்கள் கூட, இப்படி நடந்து இருக்க கூடாது என கூறுகின்றனர்.

தான் இப்போது எதிர்கொள்வது "தேர்தல் குறுக்கீடு",வரவிருக்கும் 2024 தேர்தலில் குறுக்கீடுகளை ஏற்படுத்தவே இந்த பொய் வழக்குகள் என் மீது சுமத்தப்பட்டுள்ளது, இதனை உடனடியாக கைவிட வேண்டும் என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்