போரால் உருக்குலைந்த உக்ரைனில் தற்காலிக வீடுகளாக மாறிய ரெயில் பெட்டிகள்!
ரெயில் பெட்டிகளை பொதுமக்கள் வீடுகளாக பயன்படுத்திக் கொள்ள அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கீவ்,
போரால் உருக்குலைந்த உக்ரைனில், ரெயில் பெட்டிகளை பொதுமக்கள் வீடுகளாக பயன்படுத்திக் கொள்ள அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
உக்ரைனின் இர்பின் நகரில் பெரும்பாலான வீடுகள் ரஷியாவின் குண்டு வீச்சால் உருக்குலைந்துள்ளது. இதனால் பொதுமக்கள், வீடுகள் இல்லாமல் உறைவிடம் கிடைக்காமல் கடும் சிரமத்தை சந்தித்து வந்தனர்.
இதையடுத்து அங்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ள ரெயில் பெட்டிகளை தற்காலிக வீடுகளாக பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ரெயில் பெட்டிகளில் படுக்கையறை, குளியலறை அமைக்கப்பட்டு மக்கள் தற்காலிக வீடுகளாக பயன்படுத்தி வருகின்றனர்.
இத்தனை சிரமங்களுக்கு மத்தியிலும், தங்கள் நகரை விட்டு வெளியேற மனமில்லாமல் ஆபத்துகளுக்கு நடுவில் இங்கேயே தங்கியிருப்பதாக இர்பின் நகரவாசி ஒருவர் தெரிவித்துள்ளார்.