துருக்கி ராணுவம் நடவடிக்கை: குர்திஸ்தான் அமைப்பை சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொலை

குர்திஸ்தான் அமைப்பை சேர்ந்த 3 பேர் துருக்கி ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.;

Update:2023-10-16 00:56 IST

கோப்புப்படம்

பாக்தாத்,

மத்திய கிழக்கு நாடான ஈராக் உடன் ஐரோப்பிய நாடான துருக்கி சர்வதேச எல்லையை பகிர்ந்து வருகின்றது. இந்தநிலையில் வடக்கு ஈராக் அருகே அமைந்துள்ள எல்லை பகுதியையொட்டி குர்திஸ்தான் ஆதரவு அமைப்பினர் அதிக அளவில் செயல்படுவதாக புகார்கள் எழுந்தன. மேலும் அவ்வப்போது அவர்கள் எல்லைக்கோட்டை கடந்து துருக்கிக்குள் ஊடுருவி நாசகார செயல்களையும் செய்து வந்தனர்.

இந்தநிலையில் ஈராக்கின் வடக்கு மாகாணமாக துவோக்கின் அமெதி நகரில் குர்திஸ்தான் ஆதரவு அமைப்பினர் தளம் அமைத்து செயல்படுவதாக துருக்கி ராணுவத்தினருக்கு துப்பு கிடைத்தது. இதனால் ரகசிய நடவடிக்கை மேற்கொள்ள துருக்கி ராணுவத்தினர் முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் இரவு குர்திஸ்தான் ஆதரவாளர்கள் அமைப்பினரின் தளங்களுக்கு டிரோன்களை அனுப்பி தாக்குதல் நடத்தினர். இந்த திடீர் தாக்குதலை சமாளிக்க முடியாமல் குர்திஸ்தான் அதரவு அமைப்பினர் சிதறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

இந்த ரகசிய நடவடிக்கையில் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த மூத்த ஆலோசகர் ஒருவர் உள்பட 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்