மறைந்த முன்னாள் போப் ஆண்டவர் 16-ம் பெனடிக்ட் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி
முன்னாள் போப் ஆண்டவர் 16-ம் பெனடிக்ட் உடல்நலக்குறைவால் கடந்த சனிக்கிழமை மரணமடைந்தார்.
வாடிகன் சிட்டி,
முன்னாள் போப் ஆண்டவர் 16-ம் பெனடிக்ட் உடல்நலக்குறைவால் கடந்த சனிக்கிழமை மரணமடைந்தார். அவருக்கு வயது 95. இந்த நிலையில் 16-ம் பெனடிக்டின் உடல் வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர் பேராலயத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. உள்ளூர் நேரப்படி காலை 9 மணி முதல் மக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால் அதிகாலையில் இருந்தே மக்கள் பேராலயத்துக்கு வெளியே நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
முதல் நாளான நேற்று 10 மணி நேரம் அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் சுமார் 25 ஆயிரம் பேர் அஞ்சலி செலுத்தியதாக வாடிகன் அதிகாரிகள் தெரிவித்தனர். இன்றும், நாளையும் சரியாக 12 மணி நேரம் அஞ்சலி செலுத்த மக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் 5-ந்தேதி காலை இறுதிச் சடங்குகள் நடைபெறும் எனவும் அதிகாரிகள் கூறினர்.