ரஷியாவில் கனமழை: அணை உடைந்ததால் 2 லட்சம் பேர் வெளியேற்றம்

குடியிருப்புகளில் தங்கி இருந்த 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டனர்.

Update: 2024-04-06 22:05 GMT

மாஸ்கோ,

ரஷியா அருகே கஜகஸ்தான் எல்லையையொட்டி அமைந்துள்ள ஒரேன்பர்க் மாகாணத்தில் கடந்த சிலநாட்களாக கனமழை பெய்து வருகிறது. இடைவிடாது பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு பாய்ந்து ஓடும் உரல் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அங்குள்ள ஒர்ஸ்க் நகருக்குள் தண்ணீர் புகுந்து குடியிருப்பு பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒர்ஸ்க் நகரில் மின்சாரம் வினியோகம் துண்டிக்கப்பட்டு ஆற்றோர குடியிருப்புகளில் தங்கி இருந்த 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்தநிலையில் தொடர் கனமழை தாக்குபிடிக்க முடியாமல் உரல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த அணை உடைந்தது. இதனால் வெள்ளம் பெருக்கெடுத்து ஊருக்குள் புகுந்தது. அணை பகுதியில் சுற்றி வெள்ளத்தில் சிக்கிய 2 லட்சம் பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக ரஷியா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்