ரஷியாவில் இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 13 பேர் பலி
ரஷியாவில் இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 13 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.;
கோஸ்ட்ரோமா,
ரஷியாவின் மாஸ்கோவிற்கு வடகிழக்கே சுமார் 300 கிமீ (190 மைல்) தொலைவில் அமைந்துள்ள கோஸ்ட்ரோமா நகரில் மக்கள் கூட்டம் நிறைந்த இரவு விடுதியில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த நபர் கூறுகையில், "மிக விரைவாக விடுதி அறை கடுமையான புகையால் நிரம்பத் தொடங்கியது. வெளியேறும் வழிகளைப் பார்ப்பது கடினமாக இருந்தது. மக்களிடையே தள்ளுமுள்ளும் பீதியும் ஏற்பட்டது" என்று அவர் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இதனைத்தொடர்ந்து கட்டிடத்தில் இருந்து 250 பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக மீட்புப் படையினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்குரிய குற்றவாளிகளாக இரு நபர்களை ரஷிய போலீசார் கைது செய்துள்ளதாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.