வியட்நாமில் விமான போக்குவரத்து துறையில் நிபுணர்களுக்கு பற்றாக்குறை
மாணவர்களை வெளிநாட்டுக்கு அனுப்ப வியட்நாம் நாட்டின் விமான போக்குவரத்து துறை பரிந்துரை செய்துள்ளது.
ஹனோய்,
வியட்நாமின் பொருளாதாரத்தில் சுற்றுலாத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே வருமானத்தை அதிகரிப்பதற்காக சுற்றுலா துறையை மேம்படுத்த அரசாங்கம் முடிவு செய்தது. வெளிநாடுகளில் இருந்து அங்கு வர 87.6 சதவீதம் பேர் விமான போக்குவரத்தையே பயன்படுத்தி உள்ளனர். எனவே அங்குள்ள டான் சன் நாட், லாங் தான் மற்றும் நொய் பாய் உள்ளிட்ட முக்கிய சர்வதேச விமான நிலையங்கள் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன.
ஆனால் அதற்கேற்ற வகையில் அங்கு விமான துறையில் போக்குவரத்து, துறைமுகம் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளில் ஊழியர்களின் எண்ணிக்கை இல்லை என கூறப்படுகிறது. விமான போக்குவரத்து நிபுணர்களுக்கு கணிசமான அளவில் பற்றாக்குறை நிலவுவதால் வெளிநாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களுடன் இணைந்து மாணவர்களை வெளிநாட்டுக்கு அனுப்ப விமான போக்குவரத்து துறை பரிந்துரை செய்துள்ளது.