'ஐரோப்பிய பயணத்தின் மூலம் அரசியல் ஆதாயம் கிடைத்துள்ளது' - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

உக்ரைன் மக்களுக்கு கூடுதல் பாதுகாப்பும், அரசியல் ஆதரவும் கிடைத்துள்ளதாக ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.

Update: 2023-05-16 17:40 GMT

கீவ்,

உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தனது ராணுவ படைகளை அனுப்பி தாக்குதலை தொடங்கியது. இந்த தாக்குதல் ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், உக்ரைன் ராணுவம் தொடர்ந்து போரிட்டு வருகிறது. இந்த போரில் உக்ரைன் ராணுவத்திற்கு இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் மற்றும் பொருளாதார ரீதியான உதவிகளை வழங்கி வருகின்றன.

இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அண்மையில் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின் போது இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்து பேசினார். அப்போது உக்ரைனுக்கு ஏவுகணைகள், டிரோன்கள், போர் விமானங்கள் உள்ளிட்டவற்றை வழங்குவதாக ரிஷி சுனக் உறுதியளித்ததாக ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து தனது ஐரோப்பிய சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய ஜெலன்ஸ்கி, ரெயிலில் கீவ் நகருக்குச் சென்றார். அப்போது ரெயிலில் இருந்தபடியே அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனது ஐரோப்பிய சுற்றுப்பயணத்தின் மூலம் உக்ரைன் மக்களுக்கு கூடுதல் பாதுகாப்பும், அரசியல் ஆதரவும் கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்