பிறப்பு விகிதம் குறைந்த நிலையில் சீனர்களின் ஆயுள்காலம் உயர்வு !
உலகிலேயே அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடான சீனாவில் இப்போது குழந்தைகள் பிறப்புவிகிதம் வெகுவாக குறைந்துள்ளது.
பீஜிங்,
உலகிலேயே அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடான சீனாவில் இப்போது குழந்தைகள் பிறப்புவிகிதம் வெகுவாக குறைந்துள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு, தம்பதியர் 2 குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதி அளித்தும் நிலைமையில் பெரிதான மாற்றம் இல்லை. கடந்த ஆண்டு, தம்பதியர் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ளவும் அனுமதி தந்து சட்ட திருத்தம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் அங்கு வாழ்கிற மக்களின் ஆயுள்காலம் 0.6 ஆண்டு அதிகரித்து 77.93 ஆண்டுகளாகி இருக்கிறது.
கடந்த 2020-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்புபடி சீனாவில் 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினரின் எண்ணிக்கை 26 கோடியே 40 லட்சமாக உள்ளது.
சீனாவின் அங்கமாக உள்ள திபெத்தில் உயரமான நிலப்பரப்பு காரணமாக ஆக்சிஜன் அளவு குறைவாக உள்ளதால், அங்கு மக்களின் ஆயுள்காலம் 1951-ல் 35.5 ஆண்டுகளாக இருந்தது. தற்போது அது 72.19 ஆண்டுகளாக இருக்கிறது.