பாகிஸ்தானில் பயங்கரவாத கமாண்டர் சுட்டுக் கொலை

பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் மீது ராணுவ வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

Update: 2024-01-06 23:45 GMT

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணத்தில் சமீப காலமாக பயங்கரவாத செயல்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக போலீஸ் நிலையம், ராணுவ முகாம்களை குறிவைத்தும் தாக்குதல் நடைபெறுகிறது. எனவே பயங்கரவாதிகளை கட்டுப்படுத்த அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

இந்தநிலையில் டேங்க் பகுதியில் பயங்கரவாதிகள் முகாமிட்டு இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ராணுவத்தினர் அங்கு விரைந்தனர். பின்னர் அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் மீது ராணுவ வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

அப்போது பயங்கரவாத கமாண்டரான குல் யூசப் உள்பட இருவர் கொல்லப்பட்டனர். ராணுவத்தால் மிகவும் தேடப்பட்டு வந்த யூசப் குறித்த தகவல் அளிப்பவருக்கு பாகிஸ்தான் அரசாங்கம் சுமார் ரூ.7½ லட்சம் சன்மானம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்