21-ம் நூற்றாண்டின் மிக கடுமையான அச்சுறுத்தலாக பயங்கரவாதம் உள்ளது - ரஷிய அதிபர் புதின்

பயங்கரவாதத்தை தடுக்கும் வகையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

Update: 2024-04-24 22:07 GMT

கோப்புப்படம்

மாஸ்கோ,

பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பான 12-வது சர்வதேச கூட்டம் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் நடந்தது. இதில் ரஷிய அதிபர் புதின் வீடியோ கான்பரன்சிங் மூலமாக கலந்து கொண்டு ராணுவத்தினர், அதிகாரிகள் மத்தியில் உரையாற்றினார். அப்போது 21-ம் நூற்றாண்டின் கடுமையான அச்சுறுத்தலாக பயங்கரவாதம் நீடிக்கிறது என்றார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது, "நிச்சயமாக, 21-ம் நூற்றாண்டின் மிகக் கடுமையான அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது. இதனை தடுக்கும் வகையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்" என்றார்.

மேலும் அவர், "உலகின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்படும் பயங்கரவாதத் தாக்குதல்களின் நோக்கம், தீவிரவாதக் குழுக்கள் மட்டுமின்றி, சில நாடுகளின் உளவுத் துறையினரும் கூட, அரசியல் சாசன அடித்தளங்களைத் தகர்த்து, இறையாண்மை கொண்ட நாடுகளை சீர்குலைத்து, இனம் மற்றும் மதங்களுக்கு இடையே வெறுப்பைத் தூண்டுகிறது" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்