ஹவாய் தீவில் பயங்கர காட்டுத்தீ; 36 பேர் உயிரிழப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்

மீட்புப் பணிகளை தீவிரப்படுத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2023-08-10 18:21 GMT

ஹானலூலூ,

பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள அமெரிக்காவின் ஹவாய் தீவுக் கூட்டங்களில் ஒன்றான மவுயி தீவில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. அங்கு அண்மையில் வீசிய சூறாவளிக் காற்று காரணமாக காட்டுத் தீயானது மவுயி தீவின் நகர்ப்பகுதிக்கும் பரவியது.

இந்த தீயில் நூற்றுக்கணக்கான வீடுகள் எரிந்து சாம்பலான நிலையில், 36 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அந்த தீவில் உள்ள ஒரே நகரையும் தீ சூழ்ந்துவிட்டதால், உயிரை காப்பாற்றிக் கொள்ள ஏராளமான மக்கள் கடலில் குதித்து மாயமானதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஹவாய் தீவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை 'பெரும் பேரிடர்' என அறிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உடனடியாக அங்கு மீட்புப் பணிகளை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளார். இதனிடையே ஹவாய் தீவில் தீயணைப்பு வீரர்களும், அமெரிக்க கடற்படையினரும் இணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்