எத்தியோப்பியாவில் முடிவுக்கு வந்த உள்நாட்டு போர்
ஆப்பிரிக்க ஒன்றியத்துடனான ஒப்பந்தம் மூலம் எத்தியோப்பியாவில் உள்நாட்டு போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.
அடிஸ் அபாபா,
கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் டைக்ரே பிராந்தியத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடந்து வந்தது. இந்த போரில் அப்பாவி மக்கள் 600-க்கும் மேற்பட்டோர் கலவரக்காரர்களால் படுகொலை செய்யப்பட்டனர். இதனையடுத்து அந்த பகுதியில் நெருக்கடி நிலையை எத்தியோப்பியா அரசு அறிவித்தது.
இதனால் நாட்டின் மற்ற நகரங்களுடனான போக்குவரத்து வசதி திடீரென துண்டிக்கப்பட்டது. மேலும் தொலைபேசி சேவைகளும் நிறுத்தப்பட்டது. இதனால் அங்கு சிக்கி கொண்டவர்கள் தங்களது சொந்த பகுதிகளுக்கு கூட செல்ல முடியாமல் கடந்த 2 ஆண்டுகளாக தவித்தனர்.
இந்தநிலையில் தற்போது ஆப்பிரிக்க ஒன்றியத்துடனான ஒப்பந்தம் மூலம் உள்நாட்டு போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. இதனால் அங்கு சிக்கி கொண்டவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு மகிழ்ச்சியுடன் திரும்பிச் சென்றனர்.